கல்லூரி தேர்தல் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

இளம் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் கல்லூரி தேர்தல் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.

Update: 2024-03-26 13:45 GMT

கல்லூரி தேர்தல் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

இளம் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் கல்லூரி தேர்தல் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.

நாடாளுமன்றத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு, இளம் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் கல்லூரி தேர்தல் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தால், நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று நடைபெறவுள்ளது. அதன்படி, பொதுமக்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும், வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும், முதல் வாக்காளர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும், பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, இளம் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் கல்லூரி தேர்தல் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில் செவ்வாய்க்கிழமை (இன்று) நடைபெற்றது. இக்கூட்டத்தில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருக்கும் இளம் வாக்காளர்களுக்கு 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாகவும் அறிவுறுத்தப்பட்டது.

கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தங்கள் பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாகவும், மேலும், மாணவ, மாணவியர்கள் தங்கள் கல்லூரிகளில் மாதிரி வாக்குப்பதிவு மையம் ஏற்படுத்தி, வாக்களிப்பது குறித்து அனைத்து மாணவ, மாணவியர்கள் பார்வையிட செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் உள்ள தேர்தல் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியரும் (வளர்ச்சி), ஸ்வீப் கண்காணிப்பு அலுவலருமான மணிஷ், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, ஸ்வீப் துணை கண்காணிப்பு அலுவலர்கள் சிவசங்கர், கீதா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News