அந்தியூரில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அந்தியூரில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2022-03-30 09:30 GMT

அந்தியூரில்  மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் காங்கிரஸ் கட்சியினர், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து, தவிட்டுப்பாளையம் மூப்பனார் சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தின்போது, சிலிண்டருக்கும், இருசக்கர வாகனத்திற்கும் மாலை அணிவித்து, ஒன்றிய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

நகரத் தலைவர் ஜலாலுதின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 20க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News