ஈரோட்டில் காங்கிரஸ் சார்பில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பேரணி
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் பேரணி நடைபெற்றது;
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்ளைகளை கண்டித்து மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடைபெற்றது. இதில், காங்கிரஸ் இளைஞரணி, சிறுபான்மை பிரிவு, விவசாய பிரிவு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பவானி மெயின் ரோடு பழைய காமதேனு திருமண மண்டபத்திலிருந்து துவங்கிய பேரணி காவிரி ரோடு வழியாக சென்று சத்தியமங்கலம் சாலை வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்ததில் நிறைவடைந்தது.
தொடர்ந்து, மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டது. பின்னர், நடந்த கண்டன கூட்டத்திற்கு ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெரா சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.