கோபி: சட்டவிரோதமாக மண் அள்ளிய லாரி மற்றும் பொக்லைன் பறிமுதல்

கோபி அருகே சட்டவிரோதமாக மண் அள்ளிய இரண்டு பேரை போலீசார் கைது செய்ததோடு லாரி மற்றும் பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-04-27 00:00 GMT

பறிமுதல் செய்யப்பட்ட லாரி மற்றும் பொக்லைன் இயந்திரம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கடத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட உக்கரம் கரட்டுப்புதூர் பகுதியில் சட்டவிரோதமாக மண் வெட்டி கடத்தப்படுவதாக உக்கரம் கிராம நிர்வாக அலுவலர் சபரிவாசனுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து சபரிவாசன் அளித்த புகாரில் பேரில், கடத்தூர் போலீசார் அப்பகுதிக்கு சென்றபோது, பொக்லைன் இயந்திரம் மூலம், மண் வெட்டி லாரியில் நிரப்பி கொண்டிருந்தனர்.

பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், கேத்தாம்பாளையத்தை சேர்ந்த வெங்கடாசலபதி, தாசநாயக்கனூரை சேர்ந்த அரவிந்த் ஆகியோர் பொக்லைன் இயந்திரம் மூலம், சட்டவிரோதமாக லாரியில் மண் நிரப்பியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து, லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News