ஈரோட்டில் நூல் விலை உயர்வு கண்டித்து, ஜவுளி நிறுவனங்கள் நாளை கடையடைப்பு
ஈரோட்டில் நூல் விலை உயர்வை கண்டித்து நாளை, நாளை மறுதினம் ஜவுளி நிறுவனங்கள் முழு கடையடைப்பு நடத்த முடிவு செய்துள்ளன.;
ஈரோட்டில் நூல் விலை உயர்வை கண்டித்து, நாளை, நாளை மறுதினம் (16 மற்றும் 17ம் தேதி), ஜவுளி நிறுவனங்கள் முழு கடையடைப்பு நடத்த முடிவு செய்துள்ளன.இதற்கு ஈரோடு கனி மார்க்கெட் வார சந்தை, தினசரி வியாபாரிகள் சங்கம், அசோகபுரம் வார சந்தை வியாபாரிகள், ஈரோடு சென்ட்ரல் தியேட்டர் சந்தை வியாபாரிகள், டி.வி.எஸ். வீதி சாலையோர கடை வியாபாரிகள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதன்படி கனி மார்க்கெட்டில் தினசரி 280 கடைகள், வாரச்சந்தை 780 கடைகள், அசோகபுரத்தில் 2,000 கடைகள், டி.வி.எஸ். வீதியில், 150 கடைகள், சென்ட்ரல் தியேட்டர் மார்க்கெட்டில், 1,500 கடைகள் அடைக்கப்படும் என்றும், இதனால், ஈரோடு மாநகரில் இந்த போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி வர்த்தக மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்படும். இதனால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் என, ஈரோடு கனி மார்க்கெட் வாரச்சந்தை கடை வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.