கொரோனா காலத்தில் உணவு வழங்கிய இளைஞர்களுக்கு பாராட்டு விழா
பெருந்துறையில் கொரோனா காலத்தில் உணவு வழங்கிய இளைஞர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
கொரோனா இரண்டாவது அலை பரவிய காலங்களில் பெருந்துறை சானடோரியத்திலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நோயாளிகளின் உறவினர்கள் உணவு வசதி இன்றி தவித்த போது பெருந்துறையை அடுத்துள்ள செல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்ட நபர்கள் தினந்தோறும் 300க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மதிய உணவினை தொடர்ந்து வழங்கினர்.
இந்த சேவையினை சிறப்பாக செயல்படுத்திய அந்த நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா பெருந்துறை ஈரோடு ரோடு பகுதியில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் நடைபெற்றது பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் கலந்து கொண்டு அந்த இளைஞர்களுக்கு பாராட்டி, சான்றிதழ்களை வழங்கினார்.