ஈரோடு மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியர்

ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (டிச.23) வழங்கினார்.

Update: 2024-12-23 10:15 GMT

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, குறைகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கேட்டறிந்த போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (டிச.23) வழங்கினார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 340 மனுக்கள் வரப்பெற்றன.


பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, தாட்கோ சார்பில் பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதாய் யோஜ்னா திட்டத்தின் கீழ் 13 பயனாளிகளுக்கு தலா ரூ.1.20 லட்சம் வீதம் ரூ.15.60 லட்சம் மதிப்பில் கறவை மாடு வாங்குவதற்கு ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.6.50 லட்சம் மதிப்பில் மானியத்தொகையினை வழங்கினார்.


இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியரக (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சக்திவேல், தாட்கோ மேலாளர் அர்ஜூன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, துணை ஆட்சியர் (பயிற்சி) சிவபிரகாசம் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News