ஈரோட்டில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து ஆட்சியர் மரியாதை

133 அடி உயர திருவள்ளுவா் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, திருவள்ளுவர் சிலைக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.;

Update: 2024-12-30 12:45 GMT

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவரின் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மலர்தூவி மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.

133 அடி உயர திருவள்ளுவா் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, திருவள்ளுவர் சிலைக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருவள்ளுவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழக அரசு சார்பில், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் தியானப் பாறை அருகே அமைக்கப்பட்ட 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலையை முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2000ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி திறந்து வைத்தார்.

இந்தச் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையடுத்து, செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் வெள்ளி விழா டிச.30ம் தேதி முதல் ஜன.1ம் தேதி வரை கொண்டாடும் விதமாக பொதுமக்கள் பார்வையிடும் வகையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்காலிகமாக திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (டிச.30) கலந்து கொண்டு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவரின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.சுகுமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செ.கலைமாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News