கொடுமுடி தாலுக்காவில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு
கொடுமுடி தாலுக்காவில் இன்று 15-க்கும் மேற்பட்ட இடங்களில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு மேற்கொண்டார்.
கொடுமுடி தாலுக்காவில் உள்ள கொளத்துப்பாளையம் ஊராட்சி, கோசக்காட்டூர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தனிநபர் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த பண்ணைக்குட்டை, ஊஞ்சலூர் பேரூராட்சி செல்லாண்டியம்மன் கோவில் தெரு பகுதியில் தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பேவர் பிளாக் அமைத்து சாலை மேம்படுத்தும் பணியை பார்வையிட்டார்.
தாமரைப்பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள புதிய சிமெண்ட் கான்கீரட் சாலை, ஊஞ்சலூர் பேரூராட்சி பண்ணாரி நகர் பகுதியில் 15-வது நிதிக்குழு மான்யம் சார்பில் புதிய பூங்கா அமைக்கப்படும் பணி, இச்சிப்பாளையம் ஊராட்சி தாமரைப்பாளையத்தில்14-வது நிதிக்குழு திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி,ஊராட்சி ஒன்றியம், கொந்தளம் பகுதியில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் மானிய உதவியுடன் தர்பூசணி பயிரிடப்பட்டுள்ளதையும், கொந்தளம் ஊராட்சி கருக்கம்பாளையம் பெரும்பரப்பு பகுதியில் மானிய உதவியுடன் அட்மா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மீன்வளர்ப்பு பண்ணை குட்டை, சென்னசமுத்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார் .
பின்னர், புஞ்சைகிளாம்பாடி பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மானிய உதவியுடன் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளதையும், கொந்தளம் ஊராட்சி, சோலைகிரையமேடு பகுதியில் குளம் நிரம்பியுள்ளதையும், கொடுமுடி அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகள் பதிவேடுகள், கொடுமுடி-காங்கேயம் சாலையில் அமைந்துள்ள நியாயவிலைக்கடையில் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து கொடுமுடி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பதிவேடுகளையும், கொடுமுடி-காங்கேயம் சாலையில் அமைந்துள்ள நியாயவிலைக்கடை, கொந்தளம் ஊராட்சி மாரியம்மன் கோவில் புதூர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழு பயன்பாட்டு கட்டிட வளாகத்தில் மரக்கன்றினை நட்டும், வெள்ளோட்டம்பரப்பு பேரூராட்சி வெள்ளியம்பாளையத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அமைந்துள்ள வளமீட்பு பூங்காவை ஆய்வு செய்தார்.
கொடுமுடி பேரூராட்சியில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணி, முத்தையன்வலசு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கட்டப்பட்டு வரும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடம் என கொடுமுடி தாலுக்காவில் உள்ள 15-க்கும் மேற்பட்ட இடங்களில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.