தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு

தாளவாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2021-12-30 00:30 GMT

தலமலை ஊராட்சி இட்டரை பகுதியில் வேளாண்மைத்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தின் கீழ், மண்புழு உரம் தாயாரிப்பு பணிகளை,  கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

ஈரோடு மாவட்டம் தாளவாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆசனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, நேற்று  நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், தலமலை ஊராட்சி இட்டரை பகுதியில் வேளாண்மைத்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தின் கீழ், மண்புழு உரம் தாயாரிப்பு பணிகளை பார்வையிட்டார். இதனையடுத்து, வேளாண்மைத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு தேன் பிளிந்தெடுக்கும் பெட்டியினை வழங்கினார்.

Tags:    

Similar News