சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேற்று (டிச.4) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயல்பு தணிக்கை மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் தன் பதிவேடு, முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் உள்ளிட்ட அலுவலக பதிவேடுகளை அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதிகளை பார்வையிட்டு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் சத்தியமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட கோட்டுவீராம்பாளையத்தில் செயல்படும் 4.08 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட பாதாள சாக்கடை திட்டத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு 602 வீடு கட்டி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் கொமாரபாளையம் ஊராட்சிக்கு 126 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் தாசரிபாளையம் எம்ஜிஆர் நகரில் 2 வீடுகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளிடம் திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ் 393 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், கொமாரபாளையம் ஊராட்சிக்கு 40 வீடுகளுக்கு ஆணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, மறு சீரமைப்பு செய்யப்பட்ட வீடுகளை பார்வையிட்டார்.
இதனையடுத்து, கொமாரபாளையம் ஊராட்சி தாசரிபாளையத்தில் பொது நிதியிலிருந்து ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குழந்தைகள் மையத்தினையும், உக்கரம் ஊராட்சி பெரியார் நகரில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 32 வீடுகள் மற்றும் மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட 50 வீடுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக, பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொமாரபாளையம் ஊராட்சி பாத்திமா நகர் மற்றும் மாக்கினாங்கோம்பை ஊராட்சி மாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் பகுதியில் இளம் வாக்காளர் சேர்க்கை விண்ணப்பத்தின் மீது தல ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின்போது, சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளர் செல்வம், வட்டாட்சியர் சக்திவேல், வடிபக அலுவலர் (சக்தி சுகர்ஸ்) சொரூபராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதாமணி, அப்துல் வஹாப் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.