ஈரோடு அரசு மருத்துவமனையில் கலெக்டர் நேரில் ஆய்வு
சித்தோடு அருகே ஏற்பட்ட ரசாயன வாயு கசிவு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையினை நேரில் சென்று கலெக்டர் ஆய்வு.
ஈரோடு மாவட்டம் சித்தோடு நல்லாகவுண்டன்பாளையம் கிராமம், சந்தை கடைமேடு பகுதி ஸ்ரீதர் கெமிக்கல்ஸ் நிலையத்தில் குளோரின் வாயு கசிவு ஏற்பட்டது. குளோரின் வாயு கசிவு ஆலையில் இருந்து வெளியேறியதில், பொதுமக்கள் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. வாயு கசிவுற்றதால் அதை சுவாசித்த, நடுப்பாளையத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் உயிரிழந்தார்.
மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட 13 பேர், சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.