ஈரோடு: ஆப்பக்கூடல் அருகே விதை நேர்த்தி குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்!

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே கீழ்வாணியில் விவசாயிகளுக்கு விதை நேர்த்தி குறித்து கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.;

Update: 2025-04-16 14:10 GMT

ஆப்பக்கூடல் அருகே கீழ்வாணியில் விவசாயிகளுக்கு விதை நேர்த்தி குறித்து கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள கீழ்வாணிக்கு கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமப்புற வேளாண் பணி அனுபவத்திற்காக வந்து உள்ளனர். இவர்கள், சென்னிமலைகவுண்டன்புதூரில் உயிரி எரிவாயுவின் கழிவை பயன்படுத்தி இயற்கையான முறையில் விதை நேர்த்தி செய்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.

Similar News