கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4.78 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4.78 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.

Update: 2022-03-12 01:18 GMT

தேங்காய் பருப்பு பைல் படம்

ஈரோடு மாவட்டம் கோபி-சத்தி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரம் தோறும் நடைபெறும் தேங்காய் பருப்பு ஏலத்தில் கோபி, கவுந்தப்பாடி, பங்களாபுதூர், டி.என்.பாளையம், நம்பியூர், கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம் மற்றும் புளியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 100 கணக்கான விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த வாரம் ஒரு கிலோ 91 ரூபாய்க்கு விலை போன நிலையில் இன்று நடைபெற்ற ஏலத்தில் அதிகபட்சமாக கிலோ ஒன்று 95 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 93 ரூபாய்க்கும் சராசரியாக 94 ரூபாய்க்கும் விலை போனது. இன்று 106 மூட்டைகளில் 51 குவிண்டால் தேங்காய் பருப்பு வரத்து இருந்த நிலையில் 4 லட்சத்து 78 ஆயிரத்து 168 ரூபாய்க்கு விலை போனதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News