கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆகஸ்ட் 26ம் தேதி முதல் தேங்காய் ஏலம்
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆகஸ்ட் 26ம் தேதி முதல் தேங்காய் ஏலம் நடைபெற உள்ளது.;
பைல் படம்
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மறைமுக ஏல முறையில் தேங்காய் விற்பனை நடைபெறவுள்ளது. இதில், உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் அதிக அளவில் கலந்து கொண்டு தேங்காய்களை கொள்முதல் செய்யவுள்ளனர்.
அதன்படி, ஆகஸ்ட் 26ம் தேதி முதல் தொடங்கவுள்ள இந்த ஏல விற்பனையில் கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் தங்களது தேங்காயை கருப்பு வெள்ளை என தரம் பிரித்து கொண்டு வந்து விற்பனை செய்யலாம். தேங்காய்களை அன்றைய தினம் காலை 8 மணிக்குள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டு வர வேண்டும்.
வியாபாரிகள் கொள்முதல் செய்யும் தேங்காய்களுக்கு உரிய தொகை உடனடியாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு விற்பனைக்கூட கண்காணிப்பாளரை 04256-298856 மற்றும் 86680 48588 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். என ஈரோடு விற்பனைக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.