பெருந்துறையில் ரூ.2.23 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண் பொருள்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 2.23 கோடிக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

Update: 2021-11-25 00:15 GMT

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வேளாண் பொருள்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில்,  சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், 4.591 மூட்டைகளில் 2,21,000 கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர்.

இந்த ஏலத்தில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 101.05க்கும், அதிகபட்சமாக ரூ-108.79க்கும் விற்பனையாயின. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ. 45.92க்கும், அதிகபட்சமாக ரூ.93.96க்கும் விற்பனையாயின. மொத்தம், ரூ. 2.23 கோடிக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.

Tags:    

Similar News