நவ. 1 முதல் வகுப்புகள் தொடக்கம்: பள்ளிகளில் தூய்மைப்பணி தீவிரம்

வரும் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் வகுப்புகளில் தூய்மைப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2021-10-28 10:15 GMT

வகுப்பறைகளில் தூய்மைப்பணி நடைபெற்று வருகிறது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இந்தாண்டு,  ஒன்பது முதல், பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியருக்கு செப்டம்பர் 1 முதல் நேரடி வகுப்புகள் நடைபெற்று  வருகின்றன. நவம்பர் 1-ல் இருந்து, ஒன்றாம் வகுப்பு முதல்,  எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்து நேரடி வகுப்புகள் நடக்க உள்ளது.

இதுபற்றி பள்ளி கல்வித் துறையினர் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் 1,287 அரசு துவக்க நிலை, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ளது. 1,06,520 மாணவ, மாணவியர் இதில் பயில்கின்றனர். ஈரோடு மாநகராட்சியில் உள்ள, 73 பள்ளிகளில், 15,148 மாணவ, மாணவியர் உள்ளனர்.

பவானி, பவானிசாகர், கோபி, பவானி நகராட்சியில் உள்ள, 26 பள்ளிகளில், 5361 மாணவ, மாணவிகள் உள்ளனர். நகர்புற பஞ்சாயத்துகளில் உள்ள, 268 பள்ளிகளில், 23,427 மாணவ,மாணவியர் பயில்கின்றனர். அரசு பள்ளிகளில் தூய்மை பணி தீவிரமாக நடக்கிறது. நவம்பர் 1ல் பள்ளிகள் திறக்கப்படும். மாணவ, மாணவிகளின் உடல்நிலை குறித்து தினமும் கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News