அந்தியூரில் பேரூராட்சியில் தூய்மை பணி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
அந்தியூரில் பேரூராட்சி சார்பில் தூய்மை பணி விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் தொடங்கி வைத்தார்.;
வாரத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் ஒருங்கிணைந்த சுகாதார பணிகள் திட்டத்தின் கீழ், பேரூராட்சிப் பகுதிகளில் தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதன் அடிப்படையில், தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அந்தியூர் பேரூராட்சி சார்பில், இன்று காலை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன்பு இருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை, பேரூராட்சித் தலைவர் எம். பாண்டியம்மாள் கொடியசைத்து துவக்கி வைத்தார். பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட சைக்கிள் பேரணி முக்கிய வீதிகள் வழியே சென்று மீண்டும் அதே இடத்தில் நிறைவடைந்தது.இந்த நிகழ்வில், உடற்கல்வி ஆசிரியர் திருமாவளவன் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.