இந்திய குடிமைப்பணி தேர்வு - இலவச பயிற்சி பெற அழைப்பு
ஈரோட்டில், இந்திய குடிமைப்பணி தேர்வுக்கு, இலவச பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது;
தமிழ்நாடு அரசு சார்பில், சென்னை அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையம் மற்றும் கோவை, மதுரையில் அண்ணா நூற்றாண்டு குடிமை பணி தேர்வு பயிற்சி நிலையங்கள் செயல்படுகிறது. தமிழகத்தை சேர்ந்த இளம் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகளுக்கு, கட்டணம் இல்லாத பயிற்சி வழங்கப்படுகிறது. இலவச தங்கு வசதி, உணவு, தரமான நூலகம், காற்றோட்டமான வகுப்பறையுடன் உள்ளது.
முதல்நிலை தேர்வுக்கு தயாராக விரும்பும் இளைஞர்கள், இப்பயிற்சி மையம் நடத்தும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 23.01.2022 தேதி தமிழகம் முழுவதும், ஈரோடு உட்பட, 15 மாவட்டங்களில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு பதிவு செய்யும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில், இலவச உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரம் அறிய, 0424-2275860 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.