சித்தோடு அருகே சித்தியைத் தாக்கி 21 பவுன் நகை கொள்ளை: அக்கா மகன் கைது

Gold Robbery- கட்டுமான பணிக்காக சித்தி வீட்டுக்கு வந்த அக்கா மகன் கைவரிசை காட்டி 21 பவுன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-09-12 19:45 GMT
Gold Robbery | Erode News Tamil

கைது செய்யப்பட்ட பிரகாஷ்.

  • whatsapp icon

Gold Robbery-ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள சித்தோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான மாமரத்துபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்-வசந்தி தம்பதியினர். கட்டுமான காண்ட்ராக்டர் தொழில் செய்து வரும் வெங்கடேஷ் தனது மனைவியின் அக்கா மகன் பிரகாஷ் என்ற இளைஞரைக் எலக்ட்ரீசியன் பணிக்காக தனது வீட்டில் தங்க வைத்து உள்ளார்.

இந்நிலையில் கடந்த 9ம் தேதி வெங்கடேஷ் கட்டுமான பணிக்காக வெளியில் சென்ற போது தனியாக இருந்த வெங்கடேஷின் மனைவி வசந்தியான சித்தியை உடற்பயிற்சி செய்யும் கம்பியால் வசந்தியின் அக்கா மகன் பிரகாஷ் பலமாக தாக்கி, வசந்தி கழுத்தில் இருந்த தாலிக்கொடி மற்றும் கம்மல் தோடு மற்றும் வீட்டில் இருந்த நகை என சுமார் 4 லட்சம் மதிப்பிலான 21 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பி ஓடி உள்ளார்.

இது குறித்து வெங்கடேஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சித்தோடு போலீசார் தலைமறைவாக இருந்த பிரகாஷை தேடி வந்துள்ளனர். இதை யடுத்து இன்று இளைஞர் பிரகாஷை பிடித்த போலீசார் அவரிடம் இருந்து சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான 21 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்ததுடன் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News