சாலையோரத்தில் மீட்கப்பட்ட குழந்தை குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைப்பு
ஈரோட்டில் சாலையோர புதரில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை, குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் சாலையோர புதரில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை சாலை ரங்கம்பாளையம் அருகே உள்ள இரண்டு தனியார் திருமண மண்டபங்களுக்கு இடைப்பட்ட சாலையோர புதரில் இருந்து கடந்த மாதம் 17ம் தேதியன்று பிறந்த பச்சிளங் குழந்தையை மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு குழந்தை குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த குழந்தை பற்றி யாரேனும் உரிமை உள்ளவர்கள் தகுந்த ஆவணங்களுடன் செய்தி வெளியான 60 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், புதிய கட்டிடம் 6வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஈரோடு 63801 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு குழந்தையை பெற்றுக்கொள்ளலாம்.
மேற்படி, ஆட்சேபனை எதுவும் தெரியப்படுத்தப்படாத பட்சத்தில் சிஏஆர்ஏ (https://cara.wcd.gov.in/) என்ற இணைய தளத்தின் மூலம் பதிவு செய்து குழந்தை தத்து கேட்டு விண்ணப்பித்துள்ள பெற்றோருக்கு தத்து வழங்கப்படும். அதன் பிறகு குழந்தையை பெற இயலாது என அறிவிக்கப்பட்டுள்ளது.