ஈரோட்டில் ரூ.1,085 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகளை துவக்கி வைத்து, ரூ.284 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
ஈரோடு மாவட்டத்தில் ரூ.951.20 கோடி மதிப்பிலான 559 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.133.66 கோடி மதிப்பீட்டிலான 222 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.284.02 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 50,088 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (டிச.20) வழங்கினார்.
ஈரோடு மாவட்டத்தில் ரூ.951.20 கோடி மதிப்பிலான 559 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.133.66 கோடி மதிப்பீட்டிலான 222 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.284.02 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 50,088 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.20) வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஈரோடு சோலாரில் இன்று (டிச.20) நடைபெற்ற அரசு விழாவில், ரூ.951 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 559 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.133 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 222 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 50,088 பயனாளிகளுக்கு ரூ.284 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தின் 22 கிராம ஊராட்சிகளில் உள்ள 434 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.482 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம், வைராபாளையம் உரக்கிடங்கில், ரூ.1 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் திடக் கழிவுகளை எரியூட்டும் இயந்திரம் இரண்டாவது அலகு, ஈரோட்டில் சுதந்திர தின வெள்ளி விழா பேருந்து நிலையத்தில் ரூ.45 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாகன நிறுத்தத்துடன் கூடிய வணிக வளாகம் மற்றும் பேருந்து நிழற்கூடங்களுடன் கூடிய மேம்பாட்டுப் பணிகளை திறந்து வைத்தார்.
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் ரூ.6 கோடியே 99 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தினசரி அங்காடி கட்டடம், அந்தியூர் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் ரூ.91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தத்துடன் கூடிய கடைகள், ரூ.6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 28 பூங்காக்கள், ரூ.1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 5 பொது நூலகக் கட்டடங்கள், ரூ.71 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 107 இடங்களில் சாலைப் பணிகளை திறந்து வைத்தார்.
உயர்கல்வித் துறை சார்பில், ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் ரூ.1 கோடி ரூபாய் செலவில் அயல்நாட்டு மொழிகள் கற்பித்தல் மையம் மற்றும் ரூ.8 கோடியே 54 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பில் உள்விளையாட்டரங்கத்தை திறந்து வைத்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், ரூ. 44 கோடியே 42 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட 179 பணிகளை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், ரூ.24 கோடியே 78 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் 36 உயர் வருவாய் பிரிவு பன்னடுக்கு மாடி குடியிருப்புகள், 6 வாரிய வாடகை கடைகள் மற்றும் அலுவலக வளாகக் கட்டடம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், பவானி சாலை பகுதி-1 நிலை-2 திட்டப்பகுதியில் ரூ.33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார்.
கோபி வட்டம், ஜெ ஜெ நகர் கொளப்பலூர் திட்டப்பகுதியில், ரூ.9 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள், நேதாஜி நகர் திட்டப்பகுதியில் ரூ.53 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 528 அடுக்குமாடி குடியிருப்புகள், பெருமுகை திட்டப்பகுதியில் 13 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 144 அடுக்குமாடி குடியிருப்புகள், செம்பான்கரடு திட்டப் பகுதியில் ரூ.27 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 272 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில், உத்தமத் தியாகி அய்யா ஈஸ்வரனுக்கு பவானிசாகரில் ரூ.3 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பில் முழு திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில், கணக்கம்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோயிலில் ரூ.35 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிய திருக்குளம், தங்கமேடு தம்பிகலை ஐயன் சுவாமி கோயிலில் ரூ.26 லட்சம் ரூபாய் மதிப்பில் வணிக வளாகமத்தை திறந்து வைத்தார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், வடக்கு புதுப்பாளையம், கொரவம்பாளையத்தில் ரூ.65 லட்சம் ரூபாய் மதிப்பில் துணை சுகாதார நிலையக் கட்டடங்கள், பள்ளிக் கல்வித் துறை சார்பில், சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் ரூ.2 கோடியே 13 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பத்து வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டடம், தொட்டம்பாளையம், குஜ்ஜம்பாளையம், தாசப்பகவுண்டன் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.64 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை திறந்து வைத்தார்.
நெடுஞ்சாலைகள் துறை சார்பில், ஈரோடு வெளிவட்ட சுற்றுசாலையில் ரூ.59 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் குறுக்கு வடிகால், தடுப்புச் சுவர், மையத் தடுப்பானுடன் இருவழித் தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தப்பட்ட பணிகள், ஈரோடு - கரூர் சாலையில் ரூ.20 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சிறுபாலத்துடன் இருவழித் தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தப்பட்ட பணிகளை திறந்து வைத்தார்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், சித்தோடு, நம்பியூர், தாளவாடி ஆகிய இடங்களில் ரூ.11 கோடியே 32 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், புஞ்சைகாளமங்கலம் கிராமம், சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், சித்தோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் ஆகிய இடங்களில் ரூ.6 கோடி ரூபாய் மதிப்பில் 1000 மெ.டன் கிடங்குகள், வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வெள்ளாங்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், சித்தோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் ஆகிய இடங்களில் ரூ.5 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பில் 250 மெ.டன் குளிர்பதனக் கிடங்குகளை திறந்து வைத்தார்.
புத்தூர் புதுப்பாளையத்தில் ரூ.2 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு அலுவலக வளாகம், அந்தியூரில் ரூ.2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், பர்கூர், கேர்மாளம் ஆகிய இடங்களில் 1 கோடி ரூபாய் செலவில் துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பூலப்பாளையம், ஜி.எஸ்.காலனி, அந்தியூர் காலனி ஆகிய அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிகளில் ரூ.1 கோடியே 28 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், தலமலை கிராமம் மாவனத்தம் பழங்குடியினர் நல காலனியில் 81 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தார் சாலை என மொத்தம், 951 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 559 முடிவுற்றப் பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், சோலார் பகுதியில் ரூ.18 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த காய்கறி மற்றும் மளிகை வணிக வளாகம், சத்தியமங்கலம் நகராட்சிக்கு ரூ.10 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கூடுதல் குடிநீர் மேம்பாட்டு பணிகள், மொடக்குறிச்சி பேரூராட்சியில் ரூ.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், வடுகப்பட்டி பேரூராட்சியில் ரூ.1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அலுவலகக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
நீர்வளத்துறை சார்பில், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் ரூ.2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடப்பள்ளி, அம்மாபாளையம் கிளை வாய்க்கால் புனரமைக்கும் பணி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில், ஈரோடு, ரங்கம்பாளையம் டாக்டர் அம்பேத்கர் ஆதிதிராவிடர் நலக் கல்லூரியில் ரூ.9 கோடியே 73 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தங்கும் விடுதிக் கட்டடம், எம்மாம்பூண்டியில் ரூ.1 கோடியே 27 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கிராம பயிற்சி மையக் கட்டடத்தை திறந்து வைத்தார்.
அவல்பூந்துறை, எண்ணமங்கலம், எரங்காட்டூர், அம்மாபேட்டை, கொந்தளம், கூத்தம்பாளையம், பச்சாம்பாளையம், திகினாரை எர்ணகள்ளி ஆகிய இடங்களில் ரூ.6 கோடியே 23 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பீட்டில் கிராம பயிற்சி மையக் கட்டடங்கள், பர்கூர் பழங்குடியினர் நல மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.1 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறைகள், பள்ளிக்கல்வித் துறை சார்பில், ஈரோட்டில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட மைய நூலகம் கட்ட அடிக்கல் நாட்டினார்.
ஆ.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.3 கோடியே 76 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், அ.செம்புளிச்சாம்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் ரூ.2 கோடியே 82 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புஞ்சை புளியம்பட்டி கெம்பண்ணா ஓதிமலை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஓடத்துறை சோமசுந்தரம் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் கட்டிடத்திற்கு ரூ.7 கோடியே 6 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் அடிக்கல் நாட்டினார்.
கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.2 கோடியே 82 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், சித்தோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.2 கோடியே 35 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், டி.ஜி. புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1 கோடியே 64 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், மலையப்பாளையத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1 கோடியே 41 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.2 கோடியே 82 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், சிக்கராசம்பாளையம் அரசு உயர் நிலைப் பள்ளியில் ரூ.47 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், வெள்ளி திருப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.3 கோடியே 91 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதலாக பதினான்கு வகுப்பறை கட்டடங்கள் மற்றும் அறிவியல் ஆய்வகக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
கும்மக்காளி பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.1 கோடியே 64 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், மணியக்காரன்புதூர் அரசு உயர் நிலைப்பள்ளி, நீச்சாம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, சுண்டக்காம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ரூ.6 கோடியே 35 லட்சத்து ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் கழிவறைக் கட்டடங்கள் மற்றும் குடிநீர் வசதிக்கு அடிக்கல் நாட்டினார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில், ஜெயராமபுரத்தில் ரூ.4 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாவீரன் பொல்லானின் முழு திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில், ரூ.95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பவானி சங்கமேஸ்வரர் கோயிலின் காவேரிக் கரை படித்துறையை மேம்படுத்தும் பணி, பெண்கள் உடை மாற்றும் அறை மேம்படுத்துதல் மற்றும் புதிதாக கழிவறை கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயணப்பெருமாள் கோயிலில் ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கருணை இல்லம் மராமத்து மற்றும் மறுசீரமைக்கும் பணிகள், சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் ரூ.9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஸ்ரீ பாலதேவராயர் மற்றும் ஸ்ரீ அருணகிரிநாதர் அருளாளர்களுக்கு தனி சன்னதி கட்டும் பணிகள், சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் ரூ.74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவரங்கம் மண்டபம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் ரூ.12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சரக ஆய்வாளர் அலுவலகம் கட்டும் பணி, பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் ரூ.12 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதுறை பகுதியில் கூடுதலாக மின் விளக்குகள் பொருத்தும் பணிகள், கஸ்பாபேட்டை சத்தீஸ்வரர் கோயிலில் ரூ.99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தையல்நாயகி தாயார் சன்னதி திரும்ப கட்டும் பணிகள், சத்தியமங்கலம் வட்டம் பண்ணாரி மாரியம்மன் கோயிலில் 1 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அன்னதானக் கூடம் விரிவுப்படுத்தும் பணி மற்றும் கருணை இல்லம் மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 15-வது நிதிக்குழு மானியம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம், தேசிய கிராம சுயாட்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், மாநில நிதிக்குழு மானியம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்தல், தடுப்பு சுவர் அமைத்தல், தார் சாலைகள் அமைத்தல், பேருந்து நிழற்குடை, பாலம் அமைத்தல் என ரூ.15 கோடியே 30 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 177 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், சத்தியமங்கலம் அரசு அண்ணா மருத்துவமனையில் ரூ.5 கோடியே 11 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தாய்சேய் நலப் பிரிவுக் கட்டடம், கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் ரூ.3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் என மொத்தம், ரூ.133 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 222 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
இதனையடுத்து, மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், 7,600 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்குதல் மற்றும் 422 பயனாளிகளுக்கு சமத்துவபுரம் திட்டத்தில் வீடுகள் வழங்குதல், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 3,803 பயனாளிகளுக்கு நுண்ணீர் பாசனம், விவசாய இடுபொருட்கள் வழங்குதல், அடமானக் கடன், சோலார் பம்புகள் வழங்குதல், வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டத்தில் உதவிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்பில் 877 பயனாளிகளுக்கு சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் மானியக்கடன்களை அவர் வழங்கினார்.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், பயிர் கடன், சிறு வியாபாரிகளுக்கான கடன், வீட்டுக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், சத்யவாணிமுத்து அம்மையார் இலவச தையல் இயந்திர திட்டம், திருமண உதவித் திட்டம், முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் உதவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மோட்டார் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர், சக்கர நாற்காலிகள் என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 50,088 பயனாளிகளுக்கு ரூ.284 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தியூர் ப. செல்வராஜ், கே.இ.பிரகாஷ் (ஈரோடு), கே.சுப்பராயன் (திருப்பூர்), சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி. வெங்கடாசலம் (அந்தியூர்), சி. சரஸ்வதி (மொடக்குறிச்சி), ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.