அம்மாபேட்டை பகுதிக்கு புதிய 108 ஆம்புலன்ஸ்

அம்மாபேட்டை பகுதிக்கு தமிழக அரசு புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கியுள்ளது.;

Update: 2022-02-27 11:30 GMT

தமிழ் அரசால் வழங்கப்பட்ட புதிய 108 ஆம்புலன்ஸ்.

அம்மாபேட்டை பகுதிக்கு தமிழக அரசு புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கியுள்ளது. இந்த ஆம்புலன்சில் பழைய முறை இல்லாமல் கூடுதலான வசதியுடன் புதிய வகையிலான அதிநவீன உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் இதில் இ.சி.ஜி. மானிட்டரில் ரத்த அழுத்தம் அளவிடும் கருவி, நோயாளி களை படுக்க வைக்க உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய படுக்கை போன்ற உயர் தொழில்நுட்பத்தில் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆம்புலன்ஸ் அம்மா பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டுள்ளது. புதிதாக வழங்கட பட்ட ஆம்புலன்சை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு சென்றனர்.

Tags:    

Similar News