அந்தியூரில் ரூ.3.66 கோடியில் முடிவுற்ற பணிகள் முதல்வர் திறந்து வைப்பு: எம்எல்ஏ துவக்கி வைப்பு
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ரூ.3.66 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இப்பணிகளை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் இன்று (டிச.26) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
அந்தியூரில் ரூ.3.66 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இப்பணிகளை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் இன்று (டிச.26) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ரூ.3.66 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை ஈரோடு சோலாரில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதன்படி, அந்தியூரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், ரூ.2.75 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடத்தை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் குத்தி விளக்கேற்றி துவக்கி வைத்து இன்று (டிச.26) பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை துறை உதவி இயக்குநர் சரவணன், வேளாண்மை துறை இணை இயக்குநர் சீனிவாசன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் மல்லிகா, அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன், அந்தியூர் பேரூராட்சி துணைத் தலைவர் பழனிச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல், அந்தியூர் பேருந்து நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், 2023-2024ம் ஆண்டு கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.91 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்துடன் கூடிய கடைகளை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவம், அந்தியூர் பேரூராட்சி துணைத் தலைவர் பழனிச்சாமி, அந்தியூர் பேரூர் திமுக செயலாளர் காளிதாஸ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சேகர், கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.