ஈரோடு மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில், கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், நடைபெற்று வருவதாக, கலெக்டர் தகவல்.;
இதுகுறித்து, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:
கோழி வளர்ப்போருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும், கழிச்சல் எனப்படும் வெள்ளைக்கழிச்சல் நோயை கட்டுப்படுத்தி, பொருளாதார இழப்பை தடுக்கும் பொருட்டு, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. வரும் பிப்ரவரி 14-ம் தேதி வரை, ஈரோடு மாவட்டத்தில், அனைத்து கிராம பகுதிகளிலும், மாலை நேரங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதன் மூலம், கோழிகளை வளர்ப்போர், தங்களது கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு, வெள்ளை கழிச்சல் நோய்கள் வராமல் தடுக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.