Chennimalai Murugan Temple சென்னிமலை முருகன் கோவிலில் நாளை கந்த சஷ்டி விழா துவக்கம்
Chennimalai Murugan Temple ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) கந்த சஷ்டி விழா துவங்குகிறது.;
Chennimalai Murugan Temple
தமிழகத்தில் கந்த சஷ்டி விழாவையொட்டி முருகன் கோயில்களில் விசேஷ பூஜைகள், ஆராதனைகள், அபிஷேகம் உள்ளிட்டவைகள் நடப்பது வழக்கம்.கந்த சஷ்டி விரதமிருப்பவர்கள் தினந்தோறும் முருகன் கோயில்களுக்கு சென்று முருகனை வழிபடுவர். சஷ்டி தினத்தன்று தமிழகத்தின் கடற்கரையோரத்தில் உள்ள திருச்செந்துார் முருகன் கோயிலில் நடக்கும் சூரசம்ஹாரம் வெகு பிரசித்தி பெற்றது. இதனைக் கண்டு களிக்க தமிழகம் முழுவதுமிருந்தும் மற்றும்வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் திரள்வது வழக்கமான நடைமுறையாகும்.
சென்னிமலை முருகன் கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) கந்த சஷ்டி விழா துவங்குகிறது.கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட சென்னிமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி திருவிழா 6 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி 35வது ஆண்டாக இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா நாளை (நவ.14) செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
நாளை காலை சென்னிமலை கைலாசநாதா் கோவிலில் இருந்து படிக்கட்டுகள் வழியாக மலைமேல் உள்ள முருகன் கோவிலுக்கு உத்ஸவ மூா்த்திகள் அழைத்து செல்லப்படுவா். அங்கு காலை 10 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது. தொடா்ந்து, மகா பூா்ணாஹூதி, உற்சவா் மற்றும் மூலவா் அபிஷேகம், மகா தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
தொடா்ந்து பகல் 1.30 மணிக்கு வள்ளி- தெய்வானைக்கு அபிஷேகம் நடைபெறும். 5 நாள்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சிகளில், 5வது நாளான 18ம் தேதி இரவு 7 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. சென்னிமலையில் உள்ள 4 ராஜ வீதிகளிலும் முருகன் சூரா்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.