Chennai Storm Flood Relief Work பவானி நகராட்சி 15 தூய்மை பணியாளர்கள் சென்னை பயணம்

Chennai Storm Flood Relief Work சென்னையில் புயல் மற்றும் வெள்ள பாதிப்பு சீரமைப்பு பணிக்கு பவானி நகராட்சியில் இருந்து 15 தூய்மை பணியாளர்கள் மீட்பு உபகரணங்களுடன் புறப்பட்டனர்.

Update: 2023-12-05 06:45 GMT

தூய்மை பணியாளர்களை சென்னைக்கு வழியனுப்பி வைத்த பவானி நகர் மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன்.

 Chennai Storm Flood Relief Work

சென்னையில் புயல் மற்றும் வெள்ள பாதிப்பு சீரமைப்பு பணிக்கு பவானி நகராட்சியில் இருந்து 15 தூய்மை பணியாளர்கள் மீட்பு உபகரணங்களுடன் புறப்பட்டனர். 

சென்னையில் பெய்த தொடர் மழையால் பல பகுதிகள் தண்ணீரில் மிதந்து தத்தளித்து வருகிறது.வாசலில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் வெள்ள நீரில் அடித்துச் சென்றன.கடந்த 2015 ம் ஆண்டினைப் போலவே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால்  பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். மேலும் பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மழைக்கு7பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர் மழையால் மின்இணைப்பு துண்டிப்பால் இன்டர் நெட் கனெக்‌ஷன் கோளாறு உள்ளிட்டவைகளால்  சென்னை மக்களை யாரும் தொடர்பு கொள்ள இயலாத நிலையே நீடித்தது. தற்போது மழை சற்று விட்டதால் ஆங்காங்கே சகஜ நிலை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது.

சென்னையில் மிக்ஜாம் புயலால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்கும் பணிக்காக பல மாவட்டங்களில் இருந்து துாய்மைப்பணியாளர்கள் சென்னைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை மழை வெள்ள பாதிப்பு சீரமைப்பு பணிக்காக ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சியில் இருந்து துப்புரவு ஆய்வாளர் ஜெகதீசன் தலைமையில் மேற்பார்வையாளர் கார்த்திகேயன் மற்றும் 15 தூய்மைப் பணியாளர்கள் புறப்பட்டனர்.

இவர்களை, பவானி நகர் மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன், நகராட்சி ஆணையாளர் மோகன் குமார் மற்றும் பணியாளர்கள் வழியனுப்பி வைத்தனர். இவர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று சென்னையில் வெள்ள பாதிப்புகளை சீரமைத்த பின் பவானி திரும்ப உள்ளனர்.

Tags:    

Similar News