திம்பம் மலைப்பாதையில் பகலில் சாலையை கடந்த சிறுத்தை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் பகலில் சாலையை கடந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

Update: 2024-06-25 03:00 GMT

சாலையை கடந்த சிறுத்தையை படத்தில் காணலாம்.

Erode Today News, Erode Live Updates, Erode News - சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் பகலில் சாலையை கடந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்து 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதை புலிகள் காப்பக வனப்பகுதி என்பதால், புலி, சிறுத்தை நடமாட்டம் உள்ளது.

இந்த நிலையில், நேற்று மாலை 17வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்புச்சுவரில் சிறுத்தை ஒன்று சாலையை கடக்க காத்திருந்தது. அப்போது, அந்த வழியாக வந்த வாகன ஒட்டிகள் சிறுத்தை கண்டதும் அதிர்ச்சி அடைந்து வாகனங்களை நிறுத்தினர்.

உடனே, அவர்கள் தங்களுடைய செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க தொடங்கினர் . இதனையடுத்து, சிறிது நேரத்தில் அந்த சிறுத்தை அங்கிருந்து திம்பம் மலைப்பாதை சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

மேலும், சிறுத்தை அடிக்கடி திம்பம் மலைப் பாதையில் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மெதுவாகவும், எச்சரிக்கையுடனும் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News