ஈரோடு மாவட்டத்தில் 4 மாவட்ட கல்வி அலுவலகங்கள் மாற்றம்
பள்ளிக்கல்வித்துறை நிர் வாக சீரமைப்புபடி ஈரோடு மாவட்டத்தில் 4 மாவட்ட கல்வி அலுவலகங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் நிர்வாக அமைப்புகளில் மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வந்த பவானி மற்றும் கோபி மாவட்ட கல்வி அலுவலகங்கள் தொடக்க கல்வித்துறை மாவட்ட கல்வி அலுவலகங் களாக மாற்றப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் மாவட்ட கல்வி அலுவலகம், இனி தனியார் பள்ளிகளுக்கான கல்வி அலுவலகமாகவும், பெருந்துறை மாவட்ட கல்வி அலுவலகம் இனி கரூர் மாவட்ட தனியார் பள்ளிகள் கல்வி அலுவலகமாக செயல்பட உள்ளது. ஈரோடு மாவட்ட கல்வி அலுவலகம் ஒட்டு மொத்த ஈரோடு மாவட்டத்தின் கல்வி அலுவலகமாக செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.