பராமரிப்பு பணி காரணமாக ஈரோடு-கோவை ரயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக ஈரோடு-கோவை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது;
கோப்பு படம்
பராமரிப்பு பணி காரணமாக ஈரோடு-கோவை இடையே ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சேலம் கோட்டத்தின் சோமனூர் மற்றும் வஞ்சிப்பாளையம் பகுதியில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் வரும் 12ம் தேதி லோக்மான்ய திலக் முதல் கோவை இடையே இயக்கப்படும் ரயில் (11013) லோக்மான்யாவில் இருந்து இரவு 10.35 மணிக்கு புறப்பட்டு ஈரோட்டிற்கு 14ம் தேதி காலை 4.35 மணிக்கு வந்துசேரும். ஈரோடு-கோவை இடையே இந்த ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு 14ம் தேதி காலை 10.25 மணிக்கு ஈரோட்டில் இருந்து லோக்மான்ய திலக்கிற்கு புறப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.