ஈரோடு அருகே மூதாட்டியிடம் செயின் பறிப்பு
சிவகிரி பகுதியை சேர்ந்த மூதாட்டியிடம் செயின் பறித்து சென்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றது.;
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள பள்ளக்காட்டுத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர். முத்தாயம்மாள் (வயது 75). கணவரை இழந்தவர். மூதாட்டி முத்தாயம்மாள் தனியாக வசித்து வருகிறார். நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், இருவர் வீட்டின் முன்பகுதியில் உறங்கிக் கொண்டிருந்த முத்தாயம்மாளிடம் இருந்து, ஐந்தைரை பவுன் செயினை பறித்து கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து சிவகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.