அந்தியூர் கால்நடை சந்தையில் 90 லட்சம் ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் கால்நடை சந்தையில் 90 லட்சம் ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டது.;

Update: 2022-04-09 13:30 GMT

அந்தியூர் கால்நடை சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மாடுகளை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வாரச் சந்தை வளாகத்தில் இன்று கூடிய கால்நடைச் சந்தையில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள், எருமை மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. இதில் மாடுகள் 5 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையிலும், எருமை மாடுகள் 5 ஆயிரம் ரூபாய் முதல் 55 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய கால்நடை வர்த்தகத்தில் 90 லட்சம் ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனையானது என வியாபாரிகள் கூறினர்.

Tags:    

Similar News