அந்தியூர் அருகே வாகன விபத்து: வாலிபரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிய எம்எல்ஏ
அந்தியூரில் வெள்ளையம்பாளையம் பகுதியில் வாகன விபத்தில் சிக்கிய வாலிபரை, அந்தியூர் எம்எல்ஏ, அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.;
அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாசலம், விபத்தில் சிக்கிய வாலிபர் இளங்கோவை மீட்டு, முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வெள்ளையம்பாளையம் பகுதியில், ஆப்பக்கூடல் அடுத்த ஒரிச்சேரிபுதூரை சேர்ந்த இளங்கோ,20, என்ற வாலிபர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிரே வந்த நான்கு சக்கரம் மோதி இளங்கோ விபத்துக்குள்ளானார். இந்நிலையில், அவ்வழியாகச் சென்ற அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாசலம், விபத்தில் சிக்கிய வாலிபர் இளங்கோவை மீட்டு, முதலுதவி சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.