கோபிசெட்டிபாளையம்: கஞ்சா விற்றவர் மீது குண்டாஸ்
கோபிசெட்டிபாளையம் அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார்.;
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, சத்தியமங்கலம் உதயனூரை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் ஆனந்தன் (வயது 29) என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு, கோபி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பல முறை சிறை சென்றும், சிறையிலிருந்து வெளியே வந்தவுடன், தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆனந்தனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் கைது செய்ய, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகனிடம் கோபி டிஎஸ்பி ஆறுமுகம் பரிந்துரை செய்தார்.
அதனையடுத்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் பரிந்துரைபேரில், மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி ஆனந்தன் மீது குண்டர் சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனடிப்படையில், கோவை சிறையில், உள்ள ஆனந்தன், குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.