கனரா வங்கி நடத்தும் இலவசப் பயிற்சி வகுப்பில் சேர அழைப்பு
ஈரோட்டில் கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பில், இலவசமாக வழங்கப்படும் பயிற்சியில் சேர அழைப்பு.;
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள நபர்களுக்கு வேலை வாய்ப்பு தரக்கூடிய இலவச தொழிற் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியின் போது இலவசமாக அகர்பத்தி , சாம்பிராணி, குளியல் சோப்பு, சோப்பு ஆயில், சோப்பு பவுடர், பினாயில், சேனிடைசர், சூடம், மெழுகு பொம்மை தயாரித்தல் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் தயாரித்தல் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பயிற்சியானது (06.01.2022 முதல் 20.01.2022 வரை) மொத்தம் 10 நாள் நடைபெறும். எழுத படிக்கத் தெரிந்த 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்.
இந்த பயிற்சி முற்றிலும் இலவசமாக அளிக்கப்படும். பயிற்சியின்போது சீருடை, உணவு வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் அனுமதி பெற்ற சான்றிதழ்களும், சுய தொழில் துவங்க வங்கி கடன் ஆலோசனையும் வழங்கப்படும். இதில் சேர விரும்புவோர் "கனரா வங்கி கிராமப்புற வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம் 2-ம் தளம், கொல்லம்பாளையம் பைபாஸ் ரோடு, ஈரோடு- 638002" என்ற முகவரியில் மையத்தை நேரில் தொடர்பு கொள்ளவும். கூடுதல் விவரங்களுக்கு 0424-2400338, 8778323213, 7200650604 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.