அந்தியூர் பகுதியில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருட்டு

அந்தியூர் பகுதியில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2022-04-28 10:15 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஆத்தப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (வயது 32) என்பவர் அந்தியூர் அரசு மருத்துவமனை அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார். காலையிலிருந்து இரவு வரை கடையின் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று காலை அந்தக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பாதி அளவிற்கு கடையின் ஷட்டர் கதவு திறக்கப்பட்டு இருப்பதை அருகில் உள்ள கடை நடத்துபவர்கள் தினேஷுக்கு தொலைபேசி மூலம் தங்கள் கடை திறக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்தனர்.

இதனை அடுத்து விரைந்து வந்து கடையை பார்த்த தினேஷ் அந்தியூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். அப்போது, கடையில் 3 செல்போன்கள் கடையில் வைக்கப்பட்டிருந்த பத்தாயிரம் இயர் போன் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து அருகில் உள்ள கடையில் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த கடையின் அருகில் உள்ள மெடிக்கல்கடையின் பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளனர்.

அதற்குள் பொதுமக்கள் நடமாடுவதை கண்டவுடன் தப்பிச் சென்று விட்டனர். இதே பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் 10 ஆயிரம் மதிப்புள்ள டேப் ரிக்கார்டரை திருடிச் சென்றுள்ளனர். இதனால் இந்த தொடர் திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் யார் என்பது குறித்து விரைவில் போலீசார் கண்டுபிடிக்க வேண்டுமென்று அந்த பகுதியில்பொதுமக்களும் கடையின் உரிமையாளர்களும் காவல் துறையிடம் கோரிக்கை வைக்கின்றனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் அந்தப் பகுதியில் கடை நடத்தும் உரிமையாளர்கள் யிடத்தில் கடையின் முன் பகுதியில்கேமரா பொருத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News