கோபி அருகே விவசாயிகளுடன் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை ஜூகி சவ்லா

கோபி அருகே உள்ள மேவாணி கிராமத்தில் பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லா காவேரி கூக்குரல் நிகழ்ச்சிக்காக விவசாயிகளை சந்தித்தார்.

Update: 2022-02-01 17:30 GMT

கோபி அருகே உள்ள மேவாணியில் விவசாயிகளுடன் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை ஜூகி சவ்லா

கோபி அருகே உள்ள மேவாணி கிராமத்தில் பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லா காவேரி கூக்குரல் நிகழ்ச்சிக்காக விவசாயிகளை சந்தித்தார். பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லா, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈஷாவின் காவேரி கூக்குரல் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு அவரது பிறந்தநாளின் போது, மரக்கன்றுகளை வழங்க கூறி இருந்தார். அதற்கு கோபி பகுதி விவசாயிகள் பெருமளவு பங்களித்து இருந்தனர். அதைத்தொடர்ந்து நேற்று கோபி அருகே உள்ள மேவாணி கிராமத்தில் காவேரி கூக்குரல் நிகழ்ச்சி சார்பாக கலந்து கொள்ள வந்த நடிகை ஜூகி சாவ்லா விவசாயிகளை சந்தித்து உரையாடினார்.

அதைத்தொடர்ந்து அவர்களுடன் மதிய உணவருந்திய நடிகை ஜூகி சாவ்லா, பசு மாடுகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது..இங்கு வந்தது எனக்கு சிறந்த பாடத்தை கற்று தந்துள்ளது. இன்று நிலம், காற்று என அனைத்தையும் மாசுபடுத்தி, நகரம், நாகரீகம், தொழிற்சாலையை தேடி ஓடுகிறோம். இது மிகவும் வேதனைக்கு உரியது. இங்கு குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பார்த்து வேதனை படுகிறேன்.நாம் எப்போது விழித்துகொள்ள போகிறோம். இப்போது விழித்துக கொண்டால் கூட ஒரு சில ஆண்டுகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். அதற்கு எனது முழு ஒத்துழைப்பும் உண்டு.

நாம், நமது குழந்தைகளுக்கு எதை  விட்டு செல்கிறோம் என்பதை நினைத்தால் வேதனையாகவும், வெட்கமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.நமது கல்வி முறையில் நாம் எதையும் கற்றுத்தருவது இல்லை.நமது கல்வி முறை பரிதாபத்துக்கு உரியதாக உள்ளது. குழந்தைகளை கட்டிடத்திற்குள் அடைத்து வைத்து மன அழுத்தத்தையும்,  அதனுடன் தேர்வையும் தருகிறோம்.மாணவர்களை இயற்கையில் இருந்து தள்ளி வைத்து உள்ளோம். இன்றைய குழந்தைகளிடம் பால் எங்கு கிடைக்கிறது எனக்கேட்டால் சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கிறது என கூறும் நிலை உள்ளது.இப்போது கடந்த காலத்தை விட மிகவும்  மோசமாக, செல்போன், லேப்டாப் முன்பு மாணவர்களை அமர வைத்து மன அழுத்தத்தோடு கதிரியக்கத்தையும் கொடுத்து வருகிறோம்.அரசு,  குழந்தைகள் திறனை வெளிப்படுத்தும் விதமாக செயல்பட வேண்டும்.

போர்பந்தரில் உள்ள ஒரு குருகுலத்தை நான் உற்சாகப்படுத்தி வருகிறேன். இங்கு மாணவர்கள் வகுப்பறையில் கற்பதை எப்போதாவது தான் களத்திற்கு சொல்கின்றனர். ஆனால் அங்கு மாணவர்கள் எப்போதாவது ஒரு முறை தான் வகுப்பறைக்கு வருவார்கள். மற்ற நாட்கள் முழுவதும், களத்தில் கல்வி கற்று வருகின்றனர் தான்.காரணம் நாம் வகுப்பறைக்குள் இருந்து படிக்கும் ஒவ்வொரு விசயமும் வகுப்பறைக்கு வெளியே தான் உள்ளது.கல்வியும், அறிவும் வகுபறையிலோ, கட்டிடத்திலோ, மேஜையிலோ, நாற்காலியிலோ, கரும்பலகையிலோ இல்லை. கல்வி அறிவு ஆசிரியரிடம் தான் உள்ளது. அதை அவர் எங்கு வேண்டுமானாலும் கற்பிக்கலாம்.

ஒரு பண்ணையில் வயல் வெளியில் இருந்து கொண்டு உயிரியலையும்,  கிணற்று அருகில் நின்று  இயற்பியலை கற்பிக்கலாம்.வாழ்க்கை என்பது ஒன்றுக்கொன்று தொடர்புடையது. எங்கு வேண்டுமானாலும் கற்பிக்க முடியும். ஆனால் வகுப்பறைக்குள் தான் கல்வி என்பது வாழ்கையின், இயற்கையின்  தொடர்பில் இருந்து குழந்தைகளை துண்டித்து விடுகிறோம்.இந்த உலகம் மாசு பட காரணம் படித்தவர்கள் தான்  என சத்குரு கூறி உள்ளார்.மண்ணோடு தொடர்புடையவர்கள் யாரும் பூமியை மாசுபடுத்துவதில்லைஅதனாலேயே நான் மரம் வளர்ப்பதில் ஆர்வமாக உள்ளேன்.இங்கு உள்ளதை விட என்னிடம் இரண்டு மடங்கு அதிக நிலம் உள்ளது.

அங்கு அதிக மரங்களை வளர்க்க உள்ளேன்.தமிழக மக்கள் மற்ற மாநிலங்களை விட கலாச்சாரம், மதம் சார்ந்த விசயங்களில் ஈடுபாடு அதிகம் உள்ளதோடு ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக உள்ளனர்.அதிக இந்தி சினிமாவில் நடித்து இருந்தாலும், தமிழில் நான்  பருவராகம் படத்தில் நடித்த போது ஒழுக்கம், பண்பாடு, தொழில் பக்தி போன்றவற்றை கற்றுக்கொள்ள முடிந்தது. தமிழகம், கேரளா, கர்நடாக மாநிலங்களில் கலாச்சாரம் பண்பாடு ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பெண்கள்  விவசாயத்தில் ஈடுபடுவது அதிகளவில் உள்ளது  என்றார்.

Tags:    

Similar News