பர்கூர் மலைப்பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த பொக்லைன் இயந்திரம்
அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பொக்லைன் இயந்திரம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.;
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த பர்கூர் ஊசிமலை பகுதியை சேர்ந்தவர் நாகன் மகன் பூபதி (வயது 22). இவர் இன்று மாலை 4 மணியளவில் பர்கூரிலிருந்து பொக்லைன் இயந்திரத்தை ஓட்டிக்கொண்டு வந்துள்ளார்.
பர்கூரிலிருந்து 2 கி.மீ தூரத்திற்கு இடையே வந்த போது, பொக்லைன் இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரமாக இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் பூபதி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.