ஈரோட்டில் பாஜக அலுவலகம் நாளை திறப்பு
பச்சப்பாளியில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தினை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை திறந்து வைக்கிறார்.;
ஈரோடு மாவட்ட பாரதிய ஜனதா கட்சிக்கான தலைமை அலுவலகம் பச்சப்பாளி கரூர் பைபாஸ் ரோட்டில் கட்டப்பட்டுள்ளது. ரூ2 கோடிக்கும் மேலான மதிப்பில் கட்டப்பட்டிருக்கும் இந்த அலுவலகத்தை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை நாளை மாலையில் திறந்து வைக்கிறார். நாளை மாலை திறக்கப்படவுள்ள இந்த அலுவலகத்துக்கான ஆயத்த பூஜையான கணபதி ஹோமம் மற்றும் பிற பூஜைகள் சற்று முன்னர் துவங்கியது. இதில் மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ டாக்டர் சரஸ்வதி, மாவட்ட பா. ஜ. க தலைவர் சிவசுப்பிரமணி மற்றும் பிற மாவட்ட மாநில நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட பாஜகவின் அனைத்து அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.