அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி: வன அலுவலர் ஆய்வு
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் நடந்த பறவைகள் கணக்கெடுப்பு பணியினை மாவட்ட வன அலுவலர் ஆய்வு நடத்தினார்.
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் நடந்த பறவைகள் கணக்கெடுப்பு பணியினை மாவட்ட வன அலுவலர் ஆய்வு நடத்தினார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வன சரகத்திற்கு உட்பட்ட வரட்டுப்பள்ளம் அணை, பெரிய ஏரி மற்றும் ஓடத்துறை ஏரி ஆகிய நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்றும் இன்றும் நடைபெற்றது. வனத்துறை களப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் மூலம் கணக்கெடுப்பு இரண்டு நாட்களாக நடைபெற்றது.
இந்நிலையில் இன்று மாலை மாவட்ட வன அலுவலர் கவுதம், வரட்டுப்பள்ளம் அணை நீர் நிலையில் பறவைகள் கணக்கெடுப்பு பணியினை ஆய்வு செய்தார். அப்போது அந்தியூர் வனச்சரக அலுவலர் உத்ரசாமி உள்ளிட்ட வனத் துறை பணியாளர்கள் உடனிருந்தனர்.