இரவு ஊரடங்கு: பஸ் இல்லாமல் அண்டை மாநில தொழிலாளிகள் தவிப்பு....

இரவு நேர ஊரடங்கு காரணமாக சத்தியமங்கலத்தில் பஸ் இல்லாமல் தவித்த அண்டை மாநில தொழிலாளிகள்.

Update: 2021-04-22 03:15 GMT

கொரோனா தொற்று இரண்டாம் அலை வெகு வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இரவு நேரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பல்வேறு பகுதியில் இருந்து இரவு நேரங்களில் புலம் பெயரும் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் அண்டை மாநில தொழிலாளர்கள் பஸ் வசதி இன்றி இரவு நேரத்தில் ஆங்காங்கே பஸ் ஸ்டாண்டில் தஞ்சமடைந்து தவித்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த சுமார் 10க்கும் மேற்பட்ட வடமாநில கட்டிட தொழிலாளர்கள் மற்றும் கரும்பு வெட்டும் விவசாயக் கூலி தொழிலாளிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளோடு சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஈரோடு, திருப்பூர் செல்ல பேருந்து இல்லாத காரணத்தினால் சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்டில் தஞ்சமடைந்தனர்.

இரவு நேரத்தில் பாதுகாப்பின்றி குழந்தைகளோடு தங்கியிருந்த அவர்களை கண்ட சத்தியமங்கலம் போலீசார், பஸ் ஸ்டாண்டின் முன்பு உள்ள வணிக நிறுவனம் அருகே பாதுகாப்புடன் தங்க வைத்தனர்.

இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது தெரிந்தும் அப்பகுதிகளில் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பினர்.

Tags:    

Similar News