ஆசனூரில் மின்கம்பம் மீது லாரி மோதி விபத்து
ஆசனூர் அருகே மின் கம்பத்தின் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.;
சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி அருகே கர்நாடக மாநிலத்தில் இருந்து மக்காச்சோளம் ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஆசனூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக பல்லடம் சென்று கொண்டிருந்தது. லாரி மதுவிலக்கு சோதனைச் சாவடி அருகே வந்தபோது மழையின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து சாலையின் ஓரமாக இருந்த மின் கம்பத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.