திம்பம் மலைப்பகுதியில் லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-10-22 11:45 GMT

திம்பம் மலைப்பாதையில் விபத்துக்குள்ளான லாரி. 

தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையேயான, திம்பம் மலைப்பகுதியில், 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. மலைப்பாதை வழியாக, ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஓவர்லோடு அனுமதிக்கப்படுவதால், கொண்டை ஊசி வளைவுகளில் லாரிகள் அடிக்கடி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து மரம் ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி, திம்பம் மலைப்பாதை வழியாக இன்று அதிகாலை 5 மணியளவில் லாரி சென்று கொண்டிருந்தது.லாரியை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஜெயபால் (வயது 43) என்பவர் ஓட்டினார். இந்த லாரி 26 வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது, பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் ஜெயபால் காயமின்றி உயிர் தப்பினார்.நடுரோட்டிலேயே லாரி கவிழ்ந்து கிடந்ததால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மலைப்பாதையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்கள். பிறகு கிரேன் கொண்டு செல்லப்பட்டு, லாரி மீட்கப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது..லாரி கவிந்ததால், சுமார் 3 மணி நேரம் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது


Tags:    

Similar News