சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்றைய விலை நிலவரம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.605க்கு விற்பனை.

Update: 2021-10-25 00:00 GMT

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விவசாயிகள் 4 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள்.

இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.336-க்கும், முல்லை ரூ.240-க்கும், காக்கடா ரூ.200-க்கும், செண்டுமல்லி ரூ.15-க்கும், பட்டுப்பூ ரூ.66-க்கும், ஜாதிமல்லி ரூ.375-க்கும், கனகாம்பரம் ரூ.605-க்கும், சம்பங்கி ரூ.10-க்கும், அரளி ரூ.80-க்கும், துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.50-க்கும் ஏலம் போனது.

Tags:    

Similar News