சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்க தடை
சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதிகளில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் உள்ள வனத்தை ஒட்டிய கிராமங்களில் ஒலி எழுப்பக் கூடிய பட்டாசுகள் வெடிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, யானை, புலி, சிறுத்தை, மான் உள்ளிட்ட அனைத்து வகை விலங்கினங்களும் பாதுகாப்பாக வாழக்கூடிய சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் விலங்கினங்களுக்கு தொந்தரவு ஏற்படாத வண்ணம் அதிக ஒலி எழுப்பக் கூடிய வெடிகளையும், வானத்தில் சென்று வெடிக்கக் கூடிய வெடிகளையும் வெடிக்க வேண்டாம் என தடை விதித்துள்ளது.
இதனால் வன விலங்குகள் மனித மோதல் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும், எளிதில் வனப்பகுதியில் தீ பற்றக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் சத்தம் எழுப்பக் கூடிய பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து வனத்தை ஒட்டிய கிராம பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொண்டு வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.