ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய மழை: சத்தியமங்கலத்தில் 53 மீ.மி பதிவு

ஈரோடு மாவட்டத்தில் நள்ளிரவு வரை மழை பெய்தது; மாவட்டத்தில் அதிகபட்சமாக 53 மி.மீ மழை பதிவானது.;

Update: 2021-10-03 07:30 GMT

கோப்பு படம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 4-வது நாளாக பல்வேறு இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. மாநகர் பகுதியில் மாலை 3.40 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சிறிது நேரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழையாக பெய்ய தொடங்கியது. தொடர்ந்து நள்ளிரவு வரை மழை விட்டு விட்டு பெய்தது.

இதனால், தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியது. பல்வேறு இடங்களில் ரோடுகள் சேறும் சகதியுமாக காட்சி அளித்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள ரோடுகள் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. ஒரு சில வீடுகளில் மழைநீர் புகுந்தது. பல்வேறு இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் அவதி அடைந்தனர். பலத்த இடி காரணமாக ஒரு சில வீடுகளில் மின் சாதன பொருட்கள் பழுதாகின.

மாவட்டத்தில் அதிகபட்சமாக சத்தியமங்கலத்தில் 53 மி.மீட்டர் மழை பதிவானது.  ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:

சத்தியமங்கலம்-53,

பவானிசாகர்-38.6,

எலந்த குட்டைமேடு-38.2,

கோபி-35.2,

குண்டேரிபள்ளம்-34.2,

ஈரோடு-34,

கொடிவேரி-31.2,

நம்பியூர்-29,

கொடுமுடி-27.4,

பவானி-27,

பெருந்துறை-17,

அம்மாபேட்டை-16,

வரட்டுப்பள்ளம்-16,

கவுந்தப்பாடி-12,

மொடக்குறிச்சி-11,

சென்னிமலை-4.

Tags:    

Similar News