10ஆயிரம் பேருக்கு முககவசம்,சானிடைசர் வழங்கிய மெக்கானிக்

கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் சத்தியமங்கலத்தில் தனது சொந்த செலவில் பத்தாயிரம் பேருக்கு இலவசமாக முக கவசம் வழங்கிய தன்னார்வலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Update: 2021-06-15 07:15 GMT

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த தன்னார்வலர் மூர்த்தி பைக் மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு கொரோனோ முதல் அலையின் தொடக்கத்தின் போது தன்னுடைய சொந்த செலவில் காட்டன் துணிகளால் ஆன முக கவசம் வீட்டிலேயே தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கி வந்தார்.

தற்போது கொரோனா இரண்டாம் அலை ஈரோடு மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்களின் நலன் கருதி இலவசமாக முககவசம்,சானிடைசர் வழங்க முடிவு செய்தார். அதன்படி இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்சத்தியமங்கலம் டி.எஸ்.பி சுப்பையா, வட்டாட்சியர் ரவிசங்கர் மற்றும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஆகியோர் கலந்து கொண்டு சுமார் 10,000 முககவசங்கள் மற்றும் சானிடைசர்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் போது கொண்ட டிஎஸ்பி சுப்பையா பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைவரும் இரண்டு முககவசம் அணிந்து தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். கொரோனா தொற்று காலத்தில் பொதுமக்களின் நலன் கருதி இலவசமாக முக கவசம் வழங்கி வரும் தன்னார்வலர் மூர்த்திக்கு அனைத்து தரப்பினராலும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Tags:    

Similar News