திம்பம் மலைப்பகுதியில் நிலச்சரிவு: சீரமைப்பு பணிகள் தீவிரம்

திம்பம் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் சாலையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2021-11-12 12:00 GMT

சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள். 

சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பகுதியில் கடந்த வாரத்தில் பரவலாக கன மழை பெய்தது. கடந்த வாரம் திம்பம் மலைப் பாதை 27வது கொண்டை ஊசி வளைவு அருகே இரு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை 12 சக்கரங்கள் கொண்ட கனரக சரக்கு வாகனங்கள் திம்பம் மலைப்பாதையில் பயணிக்க அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் மலைப்பாதையில் சாலை வலுவிழந்து உள்ளதால் தேசிய நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் மணல் மூட்டைகள் அடுக்கி பலப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News