சத்தியமங்கலம்: சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரிடம் ரூ. 27,670 பறிமுதல்
சத்தியமங்கலத்தில், சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 நபர்களிடம் இருந்து, 27670 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள ரங்கசமுத்திரம் பகுதியில், சூதாட்டம் நடைபெறுவதாக சத்தியமங்கலம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், ரங்கசமுத்திரம் பகுதியில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அங்குள்ள எடை மெஷின் விற்பனை செய்யும் கடைக்குள் ஆறு பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
விசாரணையில், சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள், நேரு நகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார், மோகன், ஆண்டவர் நகர் பகுதியை சேர்ந்த ரத்தினசாமி, ரங்கசமுத்திரம், ராஜவீதி பகுதியை சேர்ந்த பரமசிவம், வடக்கு பேட்டையை சேர்ந்த ஜெகநாதன் கோணமூலை பகுதியை சேர்ந்த முருகன் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 27670 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த சத்தியமங்கலம் காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.