சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.805-க்கு ஏலம்
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.805-க்கும், முல்லை ரூ.500-க்கும் ஏலம் போனது.
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூமார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலத்தில் உள்ள 45 கிராமங்களில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி இருந்து 3 டன் பூக்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தார்கள்.
இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.805-க்கும், முல்லை ரூ.500-க்கும், காக்கடா ரூ.450-க்கும், செண்டுமல்லி ரூ.93-க்கும், பட்டுப்பூ ரூ.91-க்கும், ஜாதிமல்லி ரூ.500க்கும், கனகாம்பரம் ரூ.550க்கும், சம்பங்கி ரூ.70-க்கும்,துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.160அரளி ரூ.220-க்கும், ஏலம் போனது.